Thursday, June 17News That Matters
Shadow

Breaking News

பாடசாலைகளை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

பாடசாலைகளை ஆரம்பம் குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

நாட்டில் கொவிட் 19 தொற்று நிலைமை தணிந்து சிறந்த சூழ்நிலை ஏற்பட்ட பின்னர் கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான முதற்கட்டமாக, ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்று தடுப்பூசி ஏற்றப்படும் நடவடிக்கை அமையும் என்றும் அமைச்சர் கூறினார். பாடசாலைகளை மீண்டும் படிப்படியாக திறக்கக்கூடிய பின்புலத்தை முறையாக வகுப்பது தொடர்பில் ​நேற்று (16) நடைபெற்ற விசேட கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். ...
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில அதிர்வு

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நில அதிர்வு

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில அதிர்வு தொடர்பில் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (16) மாலை விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் 1.94 அளவில் சிறய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் இது தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. ...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 1,561 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் பயணக் கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் காலப் பகுதியில் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். நாடளாவிய ரீதியில் இன்றும் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ...
பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்

பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும்

இந்நாட்டு கொவிட் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வதற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போதைய தரவுகளுக்கு அமைய கொவிட் தொற்றாளர்களில் வீழ்ச்சியை காணக்கூடியதாக உள்ளது. எனினும் எதிர்வரும் சில தினங்களில் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பயணக் கட்டுப்பாட்டை மேலும் சில காலம் பராமரித்துச் செல்வதன் மூலம் தான் தௌிவான வீழ்ச்சியை எதிர்ப்பார்க்க முடியும். பயணக்கட்டுப்பாட்டை கடுமையாக செயற்படுத்த வேண்டும். என்றார். ...
கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் பலர் பலி!

கொவிட் தொற்றுக்கு உள்ளான மேலும் பலர் பலி!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 67 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,203 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 2,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 223,586 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 188,547 ஆக அதிகரித்துள்ளது. ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு பிணை!

கைது செய்யப்பட்ட எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி, இரண்டு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் கெப்டனுக்கு இந்நாட்டில் இருந்து வௌியேற தடை விதித்து மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். ...