உள்நாட்டு

கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்த இளைஞன்!

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் மேல் இருந்து தற்கொலை செய்துக்கொள்ள வாவியில் குதித்து இளைஞன் ஒருவனை வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் காப்பாற்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று (23) பிற்பகல் 3 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

களுவாவளை 4 ம் ஶ்ரீ முத்துமாரியமன் கோவில் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞனே இவ்வாறு தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தான் கொண்டு வந்த பை மற்றும் செருப்பு என்பவற்றை பாலத்தின் மீது கழற்றி வைத்துவிட்டு பாலத்தின் மேல் இருந்து பகல் 3 மணி அளவில் குறித்த இளைஞன் வாவியில் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அப்போது அந்த பகுதியில் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக வாவியில் குதித்து இளைஞனை காப்பாறி கரை சேர்த்ததை அடுத்து அவரை உடனடியாக மட்டு போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top