உள்நாட்டு

ஒலுவில் முஹம்மது ஹுசைன் ஹஸரத் இன்று காலமானார்

ஒலுவில் கிராமத்தில் அல்லாஹ்வின் கலாமை கற்றுக் கொடுத்து பல உலமாக்கள் உருவாவதற்கும் கால் கோலாக இருந்த எல்லோராலும் மம்மஸன் ஹஸரத் என அழைக்கப்பட்ட முஹம்மது ஹுசைன் ஹஸரத் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் !

எந்த மையத்து வீடாக இருந்தாலும்,திருமண வீடாக இருந்தாலும் இயல்பாகவே பொதுச் சேவைகளில் பிறருடைய விமர்சங்களுக்கும் அப்பால் சதாவும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட உன்னத மனிதராவார். அல்லாஹ் இவருடைய நற்காரியங்களைப் பொருந்திக் கோள்வானாக.ஆமீன் !
இவர் ஒலுவில் பெரிய ஜும்ஆப் பள்ளிவாசல் உதவிப் பேஸ் இமாமாக கடமை புரிந்தவராவராவார்.

அவரின் மறுமை வாழ்விற்காக பிரார்த்திப்போம்.
யா அள்ளாஹ்! அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவாயாக. ஆமீன்!

اللهم اغفر له و ارحمه وعافيه واعف عنه وأكرم نزله ووسع مدخله

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top