அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ரிசாத் பதியுதீன் என்கின்ற தனிப் பெரும் மனிதருக்கான கட்சியே தவிர உயர்பீடம் தீர்மானம் எடுத்து செயற்படுத்துகின்ற கட்சியல்ல என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
கிறிஸ்தவ மதகுருவின் கருப்புக்கொடி போராட்டத்தை ஆதரித்து மக்கள் காங்கிரஸ் உயர் பீடம் எடுத்த தீர்மானத்தை அக்கட்சியின் போராளிகள் முற்றாக நிராகரித்துள்ளனர்.
கட்சியின் தலைவர் ரிசாத் பதியுதீன் சொல்வதை மாத்திரமே கேட்போம் என்பதை பெரும்பாலான அக்கட்சியின் போராளிகள் பேஸ்புக் பக்கங்களில் பதிவிடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.
கட்சியின் தவிசாளராக இருக்கின்ற அமீர் அலி தரப்பினர் சஜீத் பிரேமதாஸவின் தலைமையில் செயற்படுகின்ற SJ B கட்சியின் அஜந்தாவை செயற்படுத்த முனைவதாகவும் அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
சிறையில் உள்ள கட்சியின் தலைவர் ரிசாத் வெளியில் வரும் போதுதான் எவ்வாறான அரசியல் நிலைப்பாட்டை அவர் எடுக்கப் போகின்றார் என்பது தெரிய வரும்.
மக்கள் காங்கிரஸ் போராளிகளின் பதிவுகளில் ஒன்றை உங்கள் பார்வைக்காகவும் தருகின்றோம்.
மதகுரு தொடர்பில் – தலைவர் ரிஷாத் பதியுதீன் – “மதகுரு மகிழவே நான் கைதானேன்” என கூறியிருக்கும் நிலையில், அதே மதகுருவின் கறுப்பு கொடி பறக்கவிடலுக்கு ரிஷாத் பதியுதீன் தலைமை வகிக்கும் கட்சியின் பொம்மை உயர்பீடம் – ஆதரவு வழங்குமாறு அறிவித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
குறித்த மதகுருவின் நிகழ்ச்சி நிரலுக்கு அசைந்து போக – மக்கள் காங்கிரஸ் விசுவாசிகள் ஒருபோதும் தயாரில்லை.
தலைவர் விடுதலையாகும் வரை – பொம்மை உயர்பீடத்தின் எந்த வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என கட்சி அபிமானிகள் – கல்வியியலாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
