உள்நாட்டு

யாழ்.ஊடகவியலாளர் எம்.எல்.லாபீர் காலமானார்.

(பாறூக் சிஹான் )

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாக்க்கொண்ட ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலாபூஷணம் மீராலெப்பை லாபிர் அவர்கள் இன்று(22.08.2021) காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கலாபூஷணம் ,சாமஶ்ரீ தேசகீர்த்தி,தேச்சக்தி,ஊடகச்சுடர் ,நிழல்படத் தாரகை ஆகிய விருதுகளைப் பெற்ற எம்.எல்.லாபிர் அவர்கள் முஸ்லிம் மீடியா போரத்தின், யாழ் மாவட்ட இணைப்பாளராகவும்,நவமணி,விடிவெள்ளி,வீரகேசரி,தமிழ் மிர ர்,மெட்ரோ நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராகவும்
சேவையாற்றினார்.

மானிப்பாய் வீதி பெரிய முஹிதீன் ஜூம்மா பள்ளிவாசலின் நம்பிக்கையாளர் சபைத் தலைவராக்க் கடமையாற்றிய லாபிர் அவர்கள்,பிளவ்ஸ் ஹாஜியார் பவுண்டேஷன் என்னும் அமைப்பின் மூலம் பல சமூகப்பணிகளை ஆற்றி வந்தார்.

யாஅல்லாஹ்! அன்னாரது சகல பாவங்களையும் மன்னித்து மேலான
பிர்தௌஸ் என்னும் சுவனத்தை வழங்குவாயாக!

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top