உள்நாட்டு

அதிரடி நடவடிக்கை : ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை

அதிரடி நடவடிக்கை : ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கு அண்டிஜென் பரிசோதனை !

நூருல் ஹுதா உமர்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக‌ பிரிவில் மேற்கொண்ட 46 பேருக்கான அண்டிஜென் பரிசோதனையின் பெறுபேறுகள் அனைத்து நெகட்டிவாக வந்துள்ளது. என்று காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா வஸீர் தெரிவித்தார்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டு கோளுக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வஸீர் அவர்களின் தலைமையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர் ,பாதுகாப்பு படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு அண்டிஜென் பரிசோதனையின் போதே இந்த பொறுபேறுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

வீதியில் உலாவித்திரிந்தோர், முகக் கவசம் சரியான முறையில் அணியாதவர், 60க்கு மேற்பட்ட வயதானவர்கள் என பலருக்கும் மேற்கொண்ட அண்டிஜென் பரிசோதனை முடிவுகள் நெகட்டிவாக வந்துள்ளது. எனவே மக்கள் வெளியில் அத்தியவசிய தேவை தவிர வர வேண்டாம் என காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் தஸ்லிமா வசீர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top