உள்நாட்டு

கல்குடா முஸ்லிம்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமையாகும்.

கல்குடா முஸ்லிம்களின் தியாகத்திற்கு மதிப்பளிக்க வேண்டியது இலங்கை முஸ்லிம்களின் கடமையாகும், அரசியல் தலைமைகள் தலையிட்டு தீர்க்காது விடின் நிலமை மோசமாகும் ; அன்வர் நௌஷாத்

இலங்கை முஸ்லிம்களின் உள்ளங்கள் எரிமலையாக குமுறிய நிலையில் அரசு ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதி அளித்தது. இந் நிலையில் பெரிதும் தமிழ் அரசாங்க அரக்க குண அதிகாரிகளிடம் சிக்குண்டு நில புலன்களை இழந்து தவிக்கும் கல்குடா முஸ்லிம்களின் உச்ச பட்ச தியாக உணர்வாக முன் வந்து மஜ்மா காணிகளை வழங்கி , இன்று வரை சுமார் 2018 ஜனாஷாக்களை அவ்விடத்தில் அடக்க முடிந்துள்ளது.

சுமார் 100,000 க்கு மேற்ப்பட்ட சனத்தொகையினையும், 42000 வாக்களர்களையும் கொண்ட கல்குடா தொகுதி முஸ்லிம் மக்கள், கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று மத்தி ஆகிய இரு பிரதேச செயலகங்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் இவ்விரு செயலகங்களும் சுமார் 5 கிலோமீற்றர் பரப்பளவு நிலப்பகுதியின் அடைக்கப்பட்டுள்ளனர்.

மூச்சு விட முடியாத நெருக்கடியில் உள்ள முஸ்லிம்கள் தமது வறுமை, விவசாயம், வியாபாரம் போன்ற நோக்கங்களுக்காக குடியேற மாற்றுக் காணி இல்லாத நிலையில் இப்போது ஜனாசாக்களை அடக்குவதற்காக காணிகள் மனிதாபிமான அடிப்படையில் பள்ளிவாசல் மையவாடி என ஒதுக்கீடு செய்யப்பட்ட மூன்று ஏக்கர் காணியினை வழங்கி மேலும் அதனை ஐந்து எக்கர்களாக நீட்டிப்பு செய்துள்ளனர்.

அதேவேளை அங்கிருந்து மேலும் காணிகளை சுரண்டி ஏழைகளின் வயிற்றிலும், கல்குடா மக்களின் தன் மானத்திலும் கைவைக்கும் அறிக்கைகள் பெறுமதியில்லாதவை. அவை நமது மக்கள் மீது திணிக்கப்படுகிற சுமைகளாகும்.

இத்துடன், ஓட்டமாவடி பிரதேச சபை சில பொறுப்புக்களை, மக்களின் பிரதிநிதிகளிடம் மற்றும் உயர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டிய பொறுப்பை தவற விட்டுள்ளனர். இச் சபை மக்களிடம் பொறுப்புக் கூற பெரிதும் கடமைப்பட்டுள்ளனர் என்பதை கருத்திற் கொள்ள வேண்டும்.

இந்நிலையில், அதிகரித்து வரும் ” கொரோனா டெல்டா திரிபு அலை ” நாடு முழுதும் அகலக் கால் விரித்துள்ள நிலையில் அதிகரித்து வரும் ஜனாசாக்களும், நீதிமன்ற தீர்ப்பு ஊடாக அனாமோதய உடலங்களுமாக காட்டாற்று வெள்ளம் போல மாஜ்மா நகரை ஒரு உலுக்கு உலுக்கி உள்ளது.

அதேவேளை, ஜனாஸா அடக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வரும் ஒட்டமாவடி பிரதேச சபை மற்றும் நலன் விரும்பிகளின் நலன் புரிசேவைகள் பாராட்டுக்குரியது. அ

த்துடன் ஆங்காங்கே சில விமர்சனங்களை தவிர்த்து செயற்பட வேண்டியது கட்டாயமாகும். தனிப்பட்ட நலனோம்புகை அல்லது கற்பனைகளுக்காக பிரதேசத்தின் எதிர்காலத்தை சிக்கலாக்குவது மிக மோசமான பின் விளைவுகளை உருவாக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மேலும், ஜனாஸா நல்லடக்கதிற்காக காணிகளை நீட்டிப்பு செய்கின்ற நிலை ஒன்று உருவாகும் போது, அக்காணிகள் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை கவனத்திற் கொள்ள வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது.

முழு கல்குடா முஸ்லிம் பிரதேசத்தையும் மையவாடியாக்கும் நிலையை உருவாக்குவது தனது திட்டம் என்பதை சிலரது அறிவற்ற செயற்பாடுகளின் மூலம் மக்கள் தெளிவாக இனங்கண்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை இறைவனால் கண்டிப்பாக வழங்கப்படும்.

  1. அப்பிரதேச மக்களின் நில எல்லை பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
  2. இதுவரை வழங்கப்பட்ட காணிகளுக்கான மாற்றுக் காணிகள் அடையாளம் காணப்பட்டு, வழங்கப்பட வேண்டும்.
  3. கோ/ப மேற்கு, கோ/ப மத்தி எல்லைக்குட்பட்ட மக்களின் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கான தனியான நில ஒதுக்கீடு செய்யப்படல் அத்தியாவசியமானது.
  4. மஜ்மா நகர் – ஓட்டமாவடி ஜனாஸா கொமிட்டி தாபிக்கப்பட்டு அதன் பொறுப்புக்கள் கல்குடாவின் பிரதேச சபை, செயலகம் ஏனைய பிரதேச அரசு அதிகாரிகள் சாராத ஒரு சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும்.

ஆனாலும் இக்கமிட்டியில் பிரதேச சபை தவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச செயலாளர், ஆகியோர் பதவி ரீதியிலான உத்தியோகத்தர்கள் ஆவர்.

இவ்வாறு செயற்படுகின்ற போது மாத்திரமே ஓட்டமாவடி- மாஜ்மா மையவாடி தொடர்பிலான பிணக்கு களற்ற செயற்பாடுகள் நீண்ட காலத்திற்கு தொடர முடியும்.

‘ மரத்தால் விழுந்தவனை மாடு மிதிச்சாப் போல ‘ மீண்டும் மீண்டும் கல்குடா முஸ்லிம்களை துவம்சம் செய்யும் நடவடிக்கைகளில் இருந்து மீட்டிப்பு செய்ய வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது.

அரசியல் ரீதியில் ஒரு பெரும் சமூகம் அநாதரவாக நிற்கின்ற நிலையை அரசியல் தலைமைகள் நேர் கண் கொண்டு காணவேண்டும்.

தேர்தல் ஒன்றுக்காக, வாக்களிப்புக்காக வீர வசனம் பேசுவோர், தாம் மலையை பிளக்கப் போவதாக அரசியல் பில்டப் காட்டும் பிஸ்த்தாக்கள், தமது இயலாமையை இம்முறை மக்கள் மன்றி ல் ஒப்புக் கொண்டு ஆக வேண்டும்.

மக்களின் கஸ்ட்டதில் பங்கு கொள்ள வர வேண்டும். இல்லாத பட்சத்தில் முஸ்லிம் அரசியல் புரட்சி மாஜ்மாவில் இருந்து உருவாகும் என்பதில் எவ்வித ஐயமும் இருக்காது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top