உள்நாட்டு

சமூகசேவையாளர் கலந்தரின் திடிர் மரணம் பேரிழப்பாகும்

சமூகசேவையாளர் கலந்தரின் திடிர் மரணம் பேரிழப்பாகும் – உதுமாலெப்பை ஆழ்ந்த அனுதாபம் தெரிவிப்பு…..!!!

(எம்.ஐ.றியாஸ்)

அகில இலங்கை முஸ்லீம் வாலிப முன்னணியின் அம்பாறை மாவட்ட சம்மேளத்தின் ஆலோசகர் எஸ்.எல். கலந் தர் ( வயது – 78 ) இன்று கொரோனா தொற்று காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை மரமடைந்தார். Innalillahi vainaa ilahi raajhoon
அவரின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்ததாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் முன்னாள் தேசிய தலைவரும், தற்போதைய நிறைவேற்றுப் பணிப்பாளருமான அல்-ஹாஜ் எம்.ஐ.உதுமாலெப்பை.JP தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மர்ஹூம் எஸ்.எல். கலந்தர் அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் சமூக சேவைத் துறையில் தன்னை அர்ப்பணித்து தனது வாழ்நாள் பூராகவும் ஈடுபட்ட நற்குணம் கொண்ட மனிதராவார்.

இவரது சமூகப் பணிக்காக முன்னாள் அமைச்சர் மர்ஹூம் மஜீத் அவர்களினால் சம்மாந்துறை பிரதேசத்தில் கலந்தர் வீடமைப்புத் திட்டம் ஒன்றையும் அமைத்தமை குறிப்பிடத்தக்கது.

எமது அமைப்பு ,சம்மாந்துறை YMMA உட்பட பல அமைப்புகளில் பதவி வழி உத்தியோகத்தர்களாக இருந்து பல்வேறுபட்ட சமூகப்பணிகளைச் செய்தவராவார்.

அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு, இவருக்கு ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்கம் நுழைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top