உள்நாட்டு

நடமாடும் ஒட்சிசன் அலகுகளை பெற்று கொள்ள இலங்கை நடவடிக்கை

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நடமாடும் ஒட்சிசன் அலகுகளை இலங்கை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது.

இலங்கையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா வழங்கும் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என சுகாதார அமைச்சர் இந்த கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

இதேபோன்று டோசி என்ற மருந்தை இலங்கைக்கு விநியோகிப்பது தொடர்பிலும் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் இதன் போது கேட்டுக்கொண்டார்.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் விருத்தி செய்வது குறித்து இந்த கலந்துரையாடலின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top