உள்நாட்டு

போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏ.பி.எம்.அஸ்ஹர்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலிலுள்ள.காலத்தில் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்ட போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் இனி மேல் பிரதேச செயலகங்கள் ஊடாக இவ்வனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது எனபொருளாதார புத்தெழிச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது.

இதன் பிரகாரம் பொது மக்கள் மாகாணங்களுக்கிடையிலான அத்தியாவசிய தேவைகளுக்காக பயணிக்கும் பொழுது அத்தியாவசிய தேவைக்கான உரிய ஆவணங்களை இலங்கை பாதுகாப்புப் பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சமர்ப்பித்து அவற்றை நிரூபித்து பயணங்களை தடையின்றி தொடர முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top