உள்நாட்டு

கலைச்சுடர்’ எம்.பி ஹுசைன் பாரூக் காலமானார்.

(கலாநெஞ்சன் ஷாஜஹான்)

இலங்கையின் புகழ்பூத்த தொலைக்காட்சி நிகழ்ச்சியான (சுயாதீன தொலைக்காட்சி (ITN) ‘முத்துச்சரம்’ மற்றும் ‘ரசிகர் அரங்கம்’ ஆகியவற்றின் தயாரிப்பாளரும் நாடறிந்த கலைஞருமான ‘கலைச்சுடர்’ எம்.பி ஹுசைன் பாரூக் காலமானார்.

இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றியுள்ளார்.
அன்றைய காலகட்டத்தில் தொலைக்காட்சிகளில் பல அறிவிப்பாளர்களை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு.

மறைந்த மாபெரும் கலைஞர் கே. ஏ. ஜவஹர் அவர்களை பிரதான கதாபாத்திரமாக வைத்து ‘அபுநானா’ என்ற புகழ்பெற்ற நாடகத்தை தயாரித்து சுயாதீன தொலைக்காட்சியில் , முத்துச்சரம் நிகழ்ச்சி மூலம் ஒளிபரப்பி
மக்களை மகிழ்வித்தவர் இவர். இது போன்ற பல நாடகங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட அறிவிப்பாளர்கள் ,பாடகர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் பலர் உள்ளனர்.
முத்துச்சரம் ரசிகர் அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் இவரது மருமகனான எம்.எச்.எம்.சிராஜ் அறிவிப்பாளராக இருந்தார். அந்த நிகழ்ச்சிகளுக்கு சில வருட காலம் நான் நிகழ்ச்சி அமைப்பாளராக இருந்தேன்.

எனக்கு முன்னதாக பிரபல எழுத்தாளர் மொழிவாணன் நிகழ்ச்சி அமைப்பாளராக சிறப்பாக பணியாற்றினார்.
இவரது மருமகன் எனது நண்பர் என்பதன் காரணமாகவும் இடைக்கிடையே இவருடன் தொடர்பு கொள்ள முடிந்தது.
இவரது பிள்ளைகள் நல்ல நிலையில் இன்று உள்ளனர்.

இவர் காலமான செய்தியை கேட்டு மிகவும் கவலை அடைந்துள்ளேன். தொலைக்காட்சியில் வாய்ப்பு வழங்கி கலாநெஞ்சன் ஷாஜஹான் என்ற பெயரை நாடறியச் செய்த பெருமை இவருக்குண்டு.

இது போல் பலரும் அவருக்கு நன்றி கடன்பட்டு இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

ஏக இறைவன் அவருக்கு மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக. அவரது குடும்பத்தாருக்கு நிம்மதியை வழங்குவானாக.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top