வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்

வீதி விபத்துக்களில் இரண்டு மாதங்களில் 457 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் 0

🕔28.Feb 2022

வீதி விபத்துக்களில் கடந்த இரண்டு மாதங்களில் 457 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இம்மாதம் பெப்ரவரி 25 ஆம்திகதி வரையான காலப்பகுதியினுள் நடந்த 434 வீதிவிபத்துக்களில், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இவற்றில் மோட்டார் சைக்கிள் விபத்துக்கள்

மேலும்...
ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு 0

🕔27.Feb 2022

ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது. உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர். இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின்

மேலும்...
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும்  போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரும் போராட்டம்: அஹ்னாப் மற்றும் குடும்பத்தாரும் கையெழுத்திட்டனர் 0

🕔26.Feb 2022

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி மன்னாரில் இன்றைய தினம் (26) கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் பேருந்து நிலையத்தில் இலங்கை தமிரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கையெழுத்து போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், ரா. சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், மதத்தலைவர்கள் மற்றும் பொதுமக்கள்

மேலும்...
யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணு ஆயுதங்களை வழங்கியது: சீனா குற்றச்சாட்டு 0

🕔25.Feb 2022

யுக்ரைனுக்கு அமெரிக்கா அணுவாயுதங்களை வழங்கியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹுவா சுனிங் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் போது இதனைக் கூறியுள்ளார். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு முன்னதாக அமெரிக்கா – யுக்ரைனுக்கு 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அணு ஆயுதங்களை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் எடை 1,000 மெட்ரிக் டொன்னுக்கும் அதிகமாகும்

மேலும்...
சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு

சம்மாந்துறை; ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற நூற்றுக்கணக்கான யானைகள்: வனவிலங்கு அதிகாரிகள் விரட்டியடிப்பு 0

🕔25.Feb 2022

– பாறுக் ஷிஹான் – சம்மாந்துறை ஊடாக மஜீட்புரம் பகுதிகளை ஊடறுத்து நேற்று வியாழக்கிழமை (24) மாலை திடீரென ஊருக்குள் பிரவேசிக்க முயன்ற சுமார் 100 க்கும் அதிகளவான யானைகளை அவ்விடத்தில் இருந்து விரட்டுவதற்கான துரித  நடவடிக்கைகளை வனவிலங்குகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டனர். நேற்று மாலை முதல் இரவு வரை, குறித்த யானைகள் நகர்ந்து செல்லாமல் ஒரே

மேலும்...
ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது

ரஷ்ய – யுக்ரைன் விவகாரம்: இலங்கை தனது நிலைப்பாட்டை அறிவித்தது 0

🕔25.Feb 2022

ரஷ்ய – யுக்ரைன் விவகாரத்தில், இலங்கை நடுநிலை வகிக்கும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே அறிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இலங்கையின் நிலைப்பாட்டை அவர் தெரிவித்துள்ளார். “ரஷ்ய – யுக்ரைன் விவகாரம் தொடர்பில் இலங்கை தொடர்ச்சியாக உன்னிப்பாக அவதானித்து வருகிறது. அத்துடன், அங்குள்ள இலங்கையர்களை

மேலும்...
யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்?

யுக்ரேன் உளவுத்துறை தலைமையகம் அருகே தாக்குதல்? 0

🕔24.Feb 2022

யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா ஆரம்பித்துள்ள நிலையில், யுக்ரேனிய பாதுகாப்பு அமைச்சின் உளவுத்துறை தலைமையகத்தில் கரும்புகை எழுவதைப் பார்ப்பதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. “உளவுத்துறை கட்டடத்துக்கு ஏதும் ஆகவில்லை. ஆனால், அதற்கு அடுத்ததாக ஒரு பெரிய தீயில் இருந்து புகை வருகிறது. சீருடை அணிந்தவர்கள் சில பைகளை நெருப்பில் வீசுவதை காண முடிகிறது” என நேரில்

மேலும்...
ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம்

ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசையின் சின்னத்தில் இடம்பெற்றிருந்த தமிழ், ஆங்கில எழுத்துக்கள் நீக்கம் 0

🕔24.Feb 2022

– அஹமட் – தேசிய தொலைக்காட்சி அலைவரிசையான ரூபாவாஹினியின் சின்னத்தில் (Logo) இடம்பெற்றிருந்த தமிழ் மற்றும் ஆங்கில எழுத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது ‘ரூபவாஹினி’ என எழுதப்பட்ட சிங்கள எழுத்துக்கள் மட்டுமே, குறித்த சின்னத்தில் அமையப்பெற்றுள்ளது. இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கீழ், ரூபவாஹினி தொலைக்காட்சி அலைவரிசை இயங்கி வருகின்றது. மேற்படி கூட்டுத்தாபனமானது பொது நிதியில் நடத்தப்பட்டு வருகின்றமை

மேலும்...
சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

சப்பாத்து அணியாத பொலிஸ் உத்தியோகத்தர் சேவையிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔24.Feb 2022

கடமையின் போது சப்பாத்து அணியத் தவறிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சீருடை அணிந்து கொண்டு சப்பாத்துக்களுக்குப் பதிலாக செருப்புகளை அணிந்தவாறு போக்குவரத்து கடமையில் ஈடுபட்டபோது, அவரை நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக – பொலிஸ் உத்தியோகத்தரால் தடுத்து நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர்,

மேலும்...
நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு

நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட முன்பள்ளிக்கென, 68 லட்சம் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட கட்டடம் திறந்து வைப்பு 0

🕔23.Feb 2022

ஆரம்பக்கல்வியினை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் நோக்கில் நிந்தவூர் பிரதேச சபையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அல் – ஹிக்மா பாலர் பாடசாலை கட்டிடம் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம். தாஹிர் தலைமையில் நேற்று (22) திறந்து வைக்கப்பட்டது. நிந்தவூர் நெல்லித்தீவு பிரதேச மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையாகவிருந்த நிரந்தர பாலர் பாடசாலை கட்டடத் தேவைக்கு

மேலும்...

Face Book