கையில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு பணத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு

கையில் வைத்திருக்கக் கூடிய வெளிநாட்டு பணத்தின் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவிப்பு 0

🕔19.May 2022

நாட்டில் இலங்கையர்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய ஆகக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 அமெரிக்க டொலர்களில் இருந்து 10,000 அமெரிக்க டொலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.  அதன்படி, மேலதிகமாக வைத்திருக்கும் வெளிநாட்டு நாணயங்களை வங்கியின் வெளிநாட்டுக் கணக்கில் வைப்புச்செய்வதற்கோ அல்லது அவற்றை ரூபாவாக மாற்றுவதற்கோ இருவார கால அவகாசம் வழங்கப்படும் என்றும்

மேலும்...
கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு

கோதுமை மா விலை 40 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔19.May 2022

கோதுமை மாவின் விலையை ப்றீமா நிறுவனம் அதிகரித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. கோதுமை மா விலையை அதிகரிக்குமாறு தமது முகவர்கள் அனைவருக்கும் ப்றீமா நிறுவனம் அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் முதல் அமுலாகும் வகையில் ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை செரன்டிப் நிறுவனம் 35 ரூபாவால் அதிகரித்துள்ளது.

மேலும்...
நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது: பிரதமர் எச்சரிக்கை

நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படவுள்ளது: பிரதமர் எச்சரிக்கை 0

🕔19.May 2022

நாட்டில் எதிர்வரும் காலத்தில் பாரிய உணவு தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தில் இன்று (19) அறிவித்தார். இதன்படி, மக்களுக்கு நாளாந்தம் உணவை பெற்றுக்கொள்வதற்கு கடும் நெருக்கடி ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் அவர் கூறினார். உலகம் பாரிய உணவு தட்டுப்பாட்டை எதிர்நோக்கவுள்ளதாகவும், அதற்கு முகம் கொடுக்க தாம் தயாராகி வருவதாகவும் அமெரிக்க நிதி அமைச்சரை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் வாக்குமூலம்: சிஐடியினர் பெற்றனர் 0

🕔19.May 2022

காலி முகத்திடலிலுள்ள கோட்டா கோ கம பகுதியிலும் அலறி மாளிகைக்கு முன்பாகவும் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினர் (சிஐடி) நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன, சி.பி. ரத்நாயக்க, ஷான் பிரதீப் மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இதேவேளை, காலி

மேலும்...
ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலைந்துரையாடவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலைந்துரையாடவுள்ளதாக பிரதமர் அறிவிப்பு 0

🕔18.May 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தொடர்பில் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுப்பதாகவும், அது தொடர்பில் பெரும்பான்மையினரின் தீர்மானத்திற்கு இணங்குவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார். கட்சி சார்பற்ற அரசாங்கத்தை உருவாக்குவது மற்றும்

மேலும்...
பிரதமர் அலுவலக மாதாந்தச் செலவுகள் 60 மில்லியன் ரூபாவினால் குறைப்பு

பிரதமர் அலுவலக மாதாந்தச் செலவுகள் 60 மில்லியன் ரூபாவினால் குறைப்பு 0

🕔18.May 2022

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, பிரதமர் அலுவலகத்தினுடைய மாதாந்த சராசரி செலவான 120 மில்லியன் ரூபாவை, 60 மில்லியன் ரூபாவாக குறைத்துள்ளதாக பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதம மந்திரி அலுவலகம் சராசரியாக 120 மில்லியன் ரூபாவை மாதாந்தம் செலவு செய்ததாகவும், ஆனால் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றவுடன் மாதாந்த செலவுகளை

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகியோருக்கு விளக்க மறியல்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக ஆகியோருக்கு விளக்க மறியல் 0

🕔18.May 2022

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டுள்ளது. காலிமுகத்திடலில் அரசாங்கத்துக்கு எதிராக போட்டம் நடத்தி வருவோர் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று நீதிமன்றில்

மேலும்...
வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர்

வஸீம் தாஜுத்தீன்: காக்கை சிறகு கோட்பாட்டில் காணாமல் போனவர் 0

🕔18.May 2022

வஸீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்டு, நேற்றுடன் 10 வருடங்கள் பூர்த்தி – அப்ரா அன்ஸார் – ரகசியங்கள் ஒன்றுக்கொன்று இந்த உலகில் பிரிந்து வாழ்கின்றன. நாம் வாழும் இந்த உலகத்தில்தான் மடிந்தும் போகிறோம். அதுவே நியதியாகும். இந்த உலகில் ‘காக்கைச் சிறகுக் கோட்பாட்டில்’ காணாமல் போனவர்கள்தான் எத்தனை பேர்? ‘காக்கையை கொன்று மரத்தில் தொங்க விட்டால்

மேலும்...
டேன் பிரியசாத், மொரட்டுவ மேயர், சீதாவாகபுர தவிசாளர் உள்ளிட்டோர் கைது

டேன் பிரியசாத், மொரட்டுவ மேயர், சீதாவாகபுர தவிசாளர் உள்ளிட்டோர் கைது 0

🕔18.May 2022

கொழும்பு காலி முகத்திடலிலும் அலரிமாளிகைக்கு அருகாமையிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கடந்த 09 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசியான டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், குற்றப் புலனாய்வுத்

மேலும்...
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் விடுதலை 0

🕔18.May 2022

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவில் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழ்நாடு

மேலும்...

Face Book