வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

🕔 August 10, 2015
Wazeem - Janasa - 02
– அஸ்ரப் ஏ. சமத் –

பிரபல ரகா் வீரா் வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, களுபோவில முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில், இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் தோண்டி எடுக்கப்பட்டது.

இதன்போது – கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி, விசேட வைத்திய பாரிசோதகா் மற்றும் குற்றத் தடுப்பு பொலிஸ் அத்தியட்சகா் ஆகியோர் சமூகமளித்திருந்தனர்.

ஜனாஸா தோண்டியெடுக்கப்படும்போது, அதனை ஊடகங்களுக்குக் காட்ட வெண்டாமென, ரகர் வீரர் வசீமுடைய குடும்பத்தினா் விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய, மையவாடிப் பகுதி முற்றாக மறைக்கபட்டிருந்ததோடு, பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மையவாடிக்கு வெளியில் வைக்கப்பட்டிருந்த வாகனத்தில், வசீமுடைய உடல் பாகங்கள் கொண்டு செல்லப்பட்டன.

இங்கு வருகை தந்திருந்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; “தோண்டி எடுக்கப்பட்ட உடலை ஆய்வு செய்வதற்கான சகல வசதிளும் இலங்கையில் உள்ளன. வசீமுடைய உடலை – அவருடைய சகோதரி மற்றும் சகோதரா் அடையாளம் காட்டியிருந்தனா். உடல் அடக்கம் செய்யப்பட்டமை தொடர்பில் பள்ளிவாசலிலும் பதிவு உள்ளது.

இந்த நிலையில், அவா் அடக்கம் செய்யப்பட்ட இடம் தோண்டப்பட்டு, அவருடைய எலும்புகள் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. உடம்பில் அடி காயங்கள், எலும்பு முறிவு மற்றும் மண்டையோட்டில் அடி காயங்கள் இருந்தால், அவற்றினைக் கண்டு பிடிக்க முடியும் என வைத்திய அத்தியட்சகா் கூறுகின்றார்” என்றார்.

கடந்த  2012 ஆம் ஆண்டு  மே மாதம் 17ஆம் திகதி,  வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா அடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வசீமுடைய ஜனாஸா தோண்டியெடுக்கப்படும் போது, பள்ளிவாசல் மையவாடிக்கு வெளியில் வசீமுடைய மரணம் தொடர்பில் நீதி வேண்டி, சிலர் கவனஈர்ப்பு நடவடிக்கையொன்றில் ஈடுபட்டனர். Wazeem - Janasa - 05Wazeem - Janasa - 03Wazeem - Janasa - 07Wazeem - Janasa - 06Wazeem - Janasa - 01
Wazeem - Janasa - 04

Comments

Face Book