எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

🕔 February 28, 2022

யுக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இன்று திங்கள்கிழமை காலை பெலாரஸ் எல்லைக்கு அருகில் தொடங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. (இந்தச் செய்தி எழுதப்படும் போது, இலங்கையில் நேரம் பகல் 12.52, யுக்ரேனில் காலை 9.22 மணி)

யுக்ரேன் ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி, அடுத்த 24 மணிநேரம் ‘முக்கியமானது’ என்று பிரிட்டிஷ் பிரதமர் பொரிஸ் ஜோன்சனிடம் கூறியுள்ளார்.

யுக்ரேன் ராணுவம் ஞாயிற்றுக்கிழமை தனது துருப்புக்களுக்கு ‘கடினமான நேரம்’ என்றும் ரஷ்யப் படைகள் ‘கிட்டத்தட்ட எல்லா திசைகளிலும் ஷெல் தாக்குதலைத் தொடர்கின்றன’ என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த நிலையில் ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்தில் இருந்து 14 குழந்தைகள் உட்பட, 352 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக யுக்ரேன் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

Face Book