யுக்ரேன் – ரஷ்யா உயர்மட்டப் பேச்சுவார்தை ஆரம்பம்: தாக்குதல் வேகம் குறைந்துள்ளதாகவும் தெரிவிப்பு

🕔 February 28, 2022

யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையில் உயர் மட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றது.

யுக்ரேன் – பெலாரஸ் எல்லையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.

யுக்ரேனுக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று, அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியிருந்த நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இதேவேளை ரஷ்யாவின் தாக்குதலின் வேகம் குறைந்துள்ளதாக யுக்ரேன் ராணுவம் கூறுகிறது.

இந்த நிலையில் உடனடிபோர்நிறுத்தம் மற்றும் உக்ரைனில் இருந்து அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெறுவது என்பதுதான், பேச்சுவார்த்தையின் இலக்கு என யுக்ரேன் தெரிவித்துள்ளது.

யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்டு ஐந்தாவது நாளான இன்று, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளது.

தொடர்பான செய்தி: எல்லா திசைகளிலும் ரஷ்யா ஷெல் தாக்குதல்: யுக்ரேன் – ரஷ்யா பேச்சு, இன்று திங்கள் காலை தொடங்கும்

Comments

Face Book