பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான குழுவுக்கும் பாப்பரசருக்கும் இடையில் வத்திக்கானில் சந்திப்பு

🕔 February 28, 2022

பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையிலான இலங்கை கத்தோலிக்கக் குழுவினர் இன்று (28) வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சிஸ்ஸை சந்தித்தனர்.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட வத்திக்கானுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக பேராயர் ரஞ்சித் தெரிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது.

நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க தன்னால் இயன்ற உதவிகளை வழங்குவதாக உறுதியளித்து, கடந்த ஜனவரி மாதம் பேராயருக்கு பாப்பரசர் கடிதம் எழுதியிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுத் தரப்போவதில்லை என பகிரங்கமாக பலமுறை தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் ரஞ்சித்; நீதியைப் பெற்றுக் கொள்ள சர்வதேசத்தின் உதவியை நாடப்போவதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

Face Book