உலகின் மிகப்பெரும் பணக்காரர் ஈலோன் மஸ்க், ட்விட்டரை வாக்குகிறார்

🕔 April 26, 2022

லகின் மிகப்பெரிய பணக்காரரான ஈலோன் மஸ்க், ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (இலங்கைப் பெறுமதியில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 100 கோடி ரூபா) வாங்குகிறார். இதனை ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

ட்விட்டர் இயக்குநர் சபை – ஈலோன் மஸ்க் இடையே நேற்று நடந்த நீண்ட நேர பேச்சுவார்த்தையில் ஈலோன் மஸ்கின் இந்த பேரத்தை ட்விட்டர் நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டனர்.

ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்கையும், தலா ஒரு பங்கு 54.20 டொலர் என்ற விலைக்கு ஈலோன் மஸ்க் வாங்க உள்ளார். ட்விட்டரில் 9.2% பங்குகளை வைத்துள்ள ஈலோன் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஈலோன் மஸ்க் இரு வாரங்களுக்கு முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். அப்போது, ட்விட்டர் “மிகச்சிறந்த திறன்களை கொண்டிருப்பதாகவும் அதனை தான் வெளிக்கொண்டு வரவிரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.

மேலும், ட்விட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் அவர் அண்மைக் காலமாக கருத்து வெளியிட்டு வந்தார். அதில், ட்விட்டரில் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி ட்விட்டர் கணக்குகளை நீக்குதல் உள்ளிட்டவை அடங்கும்.

Comments

Face Book