நாட்டில் நிதியமைச்சர் யார்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு

🕔 May 24, 2022

நாட்டில் தற்போது நிதியமைச்சர் இல்லா நிலையில் பதில் நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே செயற்படுவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், புதிய நிதி அமைச்சர் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முடிவுகளை எடுப்பார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.  

இறுதியாக நாட்டில் நிதியமைச்சராக அலி சப்றி பதவி வகித்திருந்தார்.

Comments

Face Book