தினேஷ் கார்த்திக் தலைவராக தேர்வு!

🕔 July 2, 2022

இங்கிலாந்தில் இந்திய அணி விளையாடும் இரு பயிற்சி டி20 ஆட்டங்களுக்கு தினேஷ் கார்த்திக் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. கடந்த வருடம் ரத்தான 5 வது டெஸ்ட், இன்று தொடங்கியுள்ளது.

டி20 தொடருக்கு முன்பு இந்திய அணி – டெர்பிஷைர், நார்தாம்ப்டன்ஷைர் ஆகிய அணிகளுக்கு எதிராக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் இன்றும் கடைசிப் பயிற்சி ஆட்டம் ஞாயிறன்றும் நடைபெறவுள்ளன.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 ஆட்டம் வியாழன்று செளதாம்ப்டனில் நடைபெறுகிறது.

இந்நிலையில் இரு டி20 பயிற்சி ஆட்டங்களுக்கான இந்திய அணியின் தலைவராக மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதால் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய டி20 அணிக்கு மீண்டும் தேர்வானார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5 டி20 ஆட்டங்கள் மற்றும் அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 ஆட்டங்களில் அவர் விளையாடியுள்ளார்.

அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் அவர் இடம்பெற்றுள்ளார்.

Comments

Face Book