பிசிசிஐ போட்ட சூப்பர் திட்டம்.. டி20 உலகக் கோப்பை நமக்கு தான்.. ஆஸி செல்லும் இந்திய அணி

🕔 July 3, 2022

2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறுகிறது. கடந்த 9 ஆண்டுகளாக இந்திய அணி எந்த ஐசிசி கோப்பையையும் வென்றது இல்லை.

இதே போன்று டி20 உலகக் கோப்பை தொடங்கப்பட்ட போது வென்ற இந்திய அணிக்கு, அதன் பிறகு அந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

கடந்த முறை டி20 உலகக் கோப்பை துபாயில் நடைபெற்ற போது, இந்திய அணி முதல் முறையாக பாகிஸ்தானுடன் தோல்வியை தழுவியது.

அதே போல், லீக் சுற்றிலேயே தோல்வியை தழுவி வெளியேறியது. இதனால், இம்முறை எப்படியாவது டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று திட்டமிட்டுள்ள பிசிசிஐ, அதற்கான காய்களை கடந்த ஆண்டே நகர்த்திவிட்டது. 5 ஐபிஎல் கோப்பையை வென்ற ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தது மட்டுமல்லாமல், டி20 உலகக் கோப்பைக்கு எந்த வீரர்கள் வேண்டும் என்பதை முன் கூட்டியே தயார் செய்துவிட்டனர்.

டி20 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்கிய ரோகித், டிராவிட் கூட்டணி, அவர்களுக்கு தொடர்ந்து இருத்தரப்பு போட்டியில் வாய்ப்பு அளித்து, அவர்களுக்கு அனுபவத்தை கிடைக்க செய்தனர். தொடக்கத்தில் எப்படி விளையாட வேண்டும், விக்கெட் வீழ்ந்தால் எப்படி ஆட்டத்தை கட்டமைக்க வேண்டும். பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் போன்ற திட்டத்தை வீரர்கள் உணரும் படி போட்டியில் பயிற்சியும் அளிக்கப்பட்டது.

இங்கிலாந்துடன் டி20 தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டி20 தொடர், ஆசிய கோப்பை போன்ற போட்டிகள் நடைபெற்றாலும், டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால், அந்த ஆடுகளம் குறித்து அனுபவம் தேவைப்படும் அல்லவா. அதற்கு தான் பிசிசிஐ ஒரு சூப்பர் திட்டம் போட்டுள்ளது. டி20 உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன், ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி செல்கிறது.

அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் இந்தியா விளையாடுகிறது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை போடடிக்கான பயிற்சியும், அனுபவமும் கிடைக்கும். மேலும் ஆஸி மைதானங்களுக்கு ஏற்ப பிளேயிங் லெவனை தேர்வு செய்து, டி20 உலகக் கோப்பையில் களமிறக்க ஏதுவாக இருக்கும். பிசிசிஐ, என்ன தான் திட்டம் போட்டு கொடுத்தாலும், விளையாட வேண்டியது, நம்மவர்கள் கையில் தான் உள்ளது.

Comments

Face Book