20.9 C
Sri Lanka
October 20, 2021
Political

கொவிட் 19 சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம்

எதிர்வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி முதல் ஐக்கிய இராச்சியம் இலங்கையை தனது கொவிட் 19 சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கவுள்ளது.

இலங்கைக்கான உயர் ஸ்தானி­க­ரா­லயம் இதனை குறிப்பிட்டுள்ளது.

கொவிட் நோய்த் தொற்று பரவக்கூடிய ஆபத்தான நாடுகளின் வரிசையைக் கொண்ட சிகப்பு பட்டியலில் ஐக்கிய இராச்சியம் இலங்கையின் பெயரை கடந்த ஜூன் மாதம் 8 ஆம் திகதி இணைத்துக் கொண்டது.

சிகப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட நாடுகளிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு பயணிக்க வேண்டுமாயின் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர் என்றாலும் கொவிட் பரிசோதனை நடாத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நாடுகளிலிருந்து பயணிப்போர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவர் என ஐக்கிய இராச்சியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment

https://area52.com/ September 19, 2021 at 11:21 am

I am actually thankful to the owner of this web site
who has shared this great post at here.

my web page … deta 8 vapes; https://area52.com/,

Reply

Leave a Comment