மாணவி முறைப்பாட்டை வாபஸ் வாங்கினாலும், விசாரணைகள் தொடரும்: விரிவுரையாளரின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பில் தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவிப்பு 0
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவி, இது குறித்து பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட தனது முறைப்பாட்டை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ள போதிலும், இவ்விவகாரம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடைபெறும் என, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி மற்றும் அவரின் குடும்பத்தினரை குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விரிவுரையாளர் சார்பாகச்